Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னர் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்கு சென்றன. அதனால்தான் கிராமங்கள் அபிவிருத்தியடையவில்லை.
எதிர்கால சந்ததியினருக்காக, போரின் வலியையும் வன்முறையையும் அனுபவிக்காத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைவோம்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றன.
அதனால்தான் கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட நட்டாங்கண்டல் பொதுச் சந்தை வளாகத்திற்கு அருகிலும், மல்லாவி பகுதியில் உள்ள துணுக்காய் பிரதேச சபைக்கு சொந்தமான பொது நூலக வளாகத்திலும் ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இந்த மக்கள் சந்திப்புகளில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,
"நீங்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவே எமது நாட்டில் 76 ஆண்டுகளாக இருந்த பாரம்பரிய அரசியல் முறைமையை மாற்றியமைத்து 2024 ஆம் ஆண்டில் எங்களுக்கு ஒரு வரலாற்று வெற்றியை அளித்தீர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அந்த நம்பிக்கையை பாதுகாப்போம் என்பதையும் நான் இந்த இடத்தில் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்."
நான் இங்கு வந்தபோது, உங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதையும், மருத்துவமனையில் சத்திர சிகிச்சை கூடம் இல்லை என்பதையும், சத்திர சிகிச்சை கூடம் உள்ள மருத்துவமனைக்கு சுமார் 50 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
என்பதையும் அறிந்தேன். அவ்வாறே, பிரதேச பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரத்தில் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாததால், பிள்ளைகள் 50 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பாடசாலையில் விஞ்ஞான துறையை கற்க 50 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் கேள்விப்பட்டேன்.
பொதுப் போக்குவரத்து, பிள்ளைகளுக்கான கல்வி வசதிகள், மின்சாரம் போன்ற சரியான வசதிகள் இல்லாததால் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்த சூழ்நிலைகளை மாற்ற விரும்புவதால் தான் நீங்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்.
அனைத்து பிள்ளைகளும் தங்கள் திறமைகள் மற்றும் ஆற்றல்களின் அடிப்படையில் தங்கள் சொந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவும், வளர்ச்சியடைந்து முன்னேறவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எங்கள் அரசாங்கம் எப்படியாவது அந்தப் பணியைச் செய்யும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
முன்னைய அரசியல் முறைமையின் கீழ், கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி கிராமத்தை வந்தடையும்போது, 75% தனிநபர்களின் சட்டைப் பைகளுக்குச் சென்றது, மீதமுள்ளவையே கிராமத்திற்கு வந்துசேர்ந்தன. "அந்த முறைமையின் காரணமாக தான், இந்தப் பகுதிகள் இதுவரை அபிவிருத்தியடையவில்லை," என்று பிரதமர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், மோசடி அல்லது ஊழல் இல்லாமல் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அந்தப் பணத்தை முறையாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு குழுவை பிரதேச தலைமைத்துவத்திற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், தேசிய மக்கள் சக்தியில் உள்ள தனது குழு அந்த நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான குழு என்று தன்னால் நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
"இந்தப் பகுதிகளில் உட்கட்டமைப்பு மட்டுமல்ல, ஏராளமான மனித உயிர்களும் அழிக்கப்பட்டன. இன்னும் சிலருக்கு என்ன நடந்தது என்பதற்கு பதில் இல்லை. இந்தப் பகுதியில் போன்றே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஆயிரக்கணக்கான தாய்மார்களும், ஆயிரக்கணக்கான மனைவிமார்களும் தங்கள் பிள்ளைகள், கணவர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதில்களைத் தேடி, பல ஆண்டுகளாக துக்கத்தில் உள்ளனர். "அந்த பதில்களைக் கண்டறியவும், இதுபோன்ற விடயங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்கவும் நாங்கள் தலையிடுவோம் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறோம்," என்று பிரதமர் இங்கு தெரிவித்தார்.
கலாசார பன்முகத்தன்மையினால் சிறப்புற்று விளங்கும் ஒரு நாட்டில் உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட, இனவாதம் இல்லாத, அனைவருக்கும் நியாயமான மற்றும் சமத்துவமான ஒரே தளம் மற்றும் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும் என்றும் 2024 இல் இந்த நாட்டு மக்களால் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் 2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும்.
தேர்தலில் மற்றொரு படி முன்னேறி, எதிர்காலத்திற்காக ஒரு தூய்மையான பிரதேச சபை மற்றும் நகர சபையை கட்டியெழுப்புவதற்கு நாம் ஒன்றிணைவோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் எஸ். திலகநாதன், துணுக்காய் பிரதேச சபை வேட்பாளர், அணித் தலைவர் கணேசபிள்ளை மதனராஜ், வேட்பாளர் அணியினர் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
23 minute ago
34 minute ago