2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

வனத்தை அழித்தவர் கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக ஒரு வனப்பகுதியை சுத்தம் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் 

புல்மூடை பொலிஸ் பிரிவின் சின்ன பாலம் குளம் பகுதியில் உள்ள பன்குளம் முன்மொழியப்பட்ட காப்புப் பகுதியை ஞாயிற்றுக்கிழமை (23) மாலை சுத்தம் செய்து கொண்டிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவர் வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, ஒரு லோடர் மூலம் காட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை புல்மூடை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கைது செய்து, கோமரன்கடவல பவன அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைத்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புல்மூடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர்.

கோமரன்கடவல வன அதிகாரி அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X