Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜனவரி 05 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த பெண்ணிடம் இருந்து தங்கப் பொருட்களை, வைத்தியர் எனக்கூறி மோசடி செய்து அபகரித்த ஆண் தாதி ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் பொலன்னறுவையைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கத்தை பறிகொடுத்த பெண்ணின் தாயார் கடந்த ஒரு மாத காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் குறித்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் நோயாளியை பார்க்க வந்துள்ளனர்.
அதன்போது, நோயாளர்களை பார்வையிடும் வைத்தியர் போல் வந்த சந்தேகநபர், முறைப்பாட்டாளரின் தாயின் பதிவுகளை சரிபார்த்து, அவரின் உடல்நிலைக்கு ஏற்ப இரத்தம் வழங்க விரும்புவதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், சந்தேக நபர் இந்த இரண்டு பெண்களில் ஒருவரிடமிருந்து இரத்தம் எடுக்க விரும்புவதாகக் கூறி அவர்களை ஒரு வார்டுக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்ய அனைத்து தங்கப் பொருட்களையும் கழற்றச் சொன்னதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், தனது தங்கப் பொருட்களை தனது சகோதரிக்கு கொடுக்க விரும்புவதாக அந்தப் பெண் கூறியபோது, சந்தேக நபர் தனது சகோதரி வார்டுக்கு வெளியே இருப்பதாகக் கூறி குரல் பதிவை போலியாக வெளியிட்டுள்ளார்.
பின்னர், குறித்த பெண் தனது தங்கப் பொருட்களை குறித்த நபரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் இருந்த வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியதையடுத்து சந்தேகநபர் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதுடன் மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கடந்த காலங்களிலும் வைத்தியர் போன்று நடித்து இவ்வாறான மோசடிகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்? மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மத்திய கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகேவின் பணிப்புரையின் பிரகாரம் மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் குமார அபலதொடுவ உள்ளிட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
8 hours ago