2025 ஜனவரி 27, திங்கட்கிழமை

விதி மீறல்களுக்கு ரூ.207 மில்லியன் அபராதம்

Simrith   / 2025 ஜனவரி 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2024 இல் 24,761 சோதனைகளை நடத்தியதன் விளைவாக 23,953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அவற்றில் நிறைவடைந்த வழக்குகளுக்கு நீதவான் நீதிமன்றங்கள் ரூ. 207 மில்லியன் அபராதம் விதித்துள்ளன.

நிலுவையில் உள்ள சோதனைகள் மீதான வழக்குகளை விரைந்து பதிவு செய்ய அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிக கட்டணம் வசூலித்தல், தயாரிப்பு தகவல்களை தவறாக சித்தரித்தல், விலைகளை காட்சிப்படுத்த தவறுதல், மின் சாதனங்களுக்கான உத்தரவாதத்தை வழங்காமை, பில்களை நிறுத்துதல், சந்தையின் போட்டிக்கு எதிரான நடைமுறைகளில் ஈடுபடுதல் மற்றும் நியாயமற்ற சூழ்நிலையில் பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சட்ட மீறல்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் மின்சாதனங்கள் போன்ற பல்வேறு நுகர்வோர் பொருட்களை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது. 

அடிக்கடி சோதனை செய்யப்பட்ட பொருட்களில் அரிசி (3,114), பாண் (1,624 சோதனைகள்) மற்றும் பிஸ்கட் (1,086 சோதனைகள்) ஆகியவை அடங்குகின்றன. 

பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், மருந்தகங்கள், துணிக்கடைகள், கைபேசி விற்பனை நிலையங்கள், கட்டுமானப் பொருட் கடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கடைகள் ஆகியவை முதன்மையாக சோதனைய செய்யப்பட்டன.

குருநாகல், கம்பஹா, கண்டி, கேகாலை, புத்தளம், அநுராதபுரம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அதிகாரபை முன்னின்று நாடு முழுவதும் சோதனைகள் நடத்தியது. 

இந்த ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன, குருநாகலில் மட்டும் 2,282 சோதனைகள் நடாத்தப்பட்டன.

2025 ஆம் ஆண்டில், நுகர்வோர் முறைப்பாடுகள் மீது விரைவாகச் செயல்படவும், நாடு முழுவதும் சோதனைகளை நடத்தவும், மீறல்களைக் கண்டறிய உளவுத்துறையைப் பயன்படுத்தவும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X