2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை

”வேணாம் வேணாம் சாவு வேணாம்”

Editorial   / 2025 மார்ச் 04 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக நெடுந்தீவில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக  செவ்வாய்க்கிழமை (04)  காலையில்  ஒன்று திரண்ட மக்கள் மதுபான சாலைக்கு எதிராக  பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவு மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிராக அப் பகுதி மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தனர்.

நெடுந்தீவில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் நடமாடும் சேவை புதன்கிழமை (05) நடைபெறவுள்ள நிலையில்   மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது ”குடியை விடு பிள்ளைகளை படிக்க விடு”, “அரசியல் பேசவில்லை எம் ஆதங்கம் பேசுகிறது”, “போதையை ஒழிப்போம்” , “அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்“, ”வேணாம் வேணாம் சாவு வேணாம்”,   “எமது குடும்ப விளக்கை அணைத்து விடாதே”  உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .