2024 டிசெம்பர் 25, புதன்கிழமை

வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்

Mayu   / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றிருந்த அவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் சமூகத்தில் இவரைப் பற்றி அதிகம் பேசப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X