2025 ஜனவரி 30, வியாழக்கிழமை

வசந்த கரன்னாகொடவின் மனுவை விசாரிப்பதில் இருந்து விலகிய நீதிபதி

Freelancer   / 2025 ஜனவரி 29 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி வசந்த கரன்னாகொட  தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி அமல் ரணராஜா குறித்த வழக்கில் இருந்து நேற்று விலகினார்.

இதனையடுத்து இந்த வழக்கு புதிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வசந்த கரன்னாகொட தாக்கல் செய்திருந்த மனுவின் நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா, பி. குமரன் ரத்தினம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்தே மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், ​​குறித்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதி அமல் ரணராஜா, தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி அமல் ரணராஜா முன்னர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், எனவே இந்த வழக்கின் விசாரணையிலிருந்து அவர் விலகுவதாகவும் நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி மாயாதுன்னே கொரயா தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .