2025 ஜனவரி 11, சனிக்கிழமை

விசேட புகையிரத சேவைகள்

Freelancer   / 2025 ஜனவரி 10 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தைப்பொங்கலுடன் இணைந்த வார இறுதி விடுமுறையை கருத்திற் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென புகையித சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இன்றும், எதிர்வரும் 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளிலும் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பெப்ரவரி மாதம் 02 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் இரவு 7.30க்கு கொழும்பு கோட்டையிலிருந்து விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

இந்தநிலையில், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளில் இரவு 7.40க்கு சேவையை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X