2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

விசேட தேவையுடையோரின் கவனத்துக்கு...

Freelancer   / 2024 ஒக்டோபர் 18 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, விசேட தேவையுடைய வாக்காளர்கள் வாக்குசீட்டில் அடையாளமிடுவதற்காக, உதவியாளர் ஒருவரை அழைத்து செல்ல முடியுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, அவ்வாறு அழைத்து செல்லப்படும் உதவியாளர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மேலும், அவர் வேட்பாளரின் முகவராகவோ வாக்களிப்பு நிலையத்தின் முகவராகவோ இருக்க கூடாது. அத்துடன், அவர் உரிய தகுதி சான்றிதழை வாக்களிப்பு நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதேவேளை, போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், தேர்தல்கள் ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

இந்த போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும் , www.election .gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் உரிய தெரிவத்தாட்சி அலுவரிடம் அல்லது  மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பவர், தன்னால் கால்நடையாகவோ அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல முடியாது என நிரூபிக்கக்கூடியவாறு, வைத்தியரின் சான்றிதழுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.(AN)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .