2025 மார்ச் 21, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

Janu   / 2025 மார்ச் 20 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தினியாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 07வது தூண், உபேக்ஷா பாலர் பாடசாலைக்கு அருகில் வியாழக்கிழமை (20)  மாலை இடம்பெற்ற  வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்து மீகஹதென்ன ஆதார வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாக தினியாவல பொலிஸார் தெரிவித்தனர்.

நெலுவ பகுதியிலிருந்து பெலவத்தை நோக்கி, தேயிலை ஏற்றி பயணித்துக்கொண்டிருந்த  லொறியொன்றும்,  பெலவத்தையிலிருந்து களுபோவிட்டியான நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றுமே இவ்வாறு மோதி  விபத்தில் சிக்கியுள்ளன.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் தினியாவல பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X