2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட நாள் இன்று

S.Renuka   / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமை (27) என  தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, அந்த அதிகாரப்பூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெறுவதற்கு வீட்டிலேயே இருக்குமாறு  தேர்தல் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தக்கட்டுள்ளது.

வீடுகளுக்குச் சென்று அதிகாரப்பூர்வ தேர்தல் அட்டைகளை விநியோகிக்கும் பணி 29ஆம் திகதி வரை தொடரும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமைக்குள் (29ஆம் திகதி)  தங்கள் அட்டைகளைப் பெறாத வாக்காளர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டையுடன் (NIC) தங்கள் உள்ளூர் தபால் நிலையத்திற்குச் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி மன்றத் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X