2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வாக்களிப்பதற்கு உங்கள் கால்களை பயன்படுத்துங்கள்

Editorial   / 2024 நவம்பர் 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாக்களிப்பதற்கு உங்கள் கால்களை பயன்படுத்துங்கள்

நாட்டின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில், இன்று 14ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு நிறைவடையும். வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டதன் பின்னர், வாக்கெண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தபால்மூல வாக்குகளே முதலில் எண்ணப்படும். 

பலர் இந்த நாளுக்காக கை விரலைக் கட்டிக் காத்திருந்தனர், மற்றவர்கள் இந்த நாள் வராமல் இருந்தால் நல்லது என்று காத்திருந்தனர். வெற்றியாளர் மட்டுமே ஒரு வாக்கை விரும்புகிறார். தோற்றவனுக்கு அது பிடிக்காது. ஒவ்வொரு ஜனாதிபதி,பொது, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் இது பொதுவான அம்சமாகும்.

ஜனநாயகம் என்பது முதலாளித்துவத்தின் அரசியல் வடிவம். அது முதலாளித்துவத்தின் தளத்தில் இயங்கினாலும், மக்களாட்சியில் இருந்து மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கிறது. நமது நாட்டில் ஜனநாயக தேர்தல் நடைபெறவுள்ளது. மன்னராட்சிகள் இல்லாமல், ஒருதலைபட்ச ஆட்சி இல்லாமல், தீவிரவாத மரணதண்டனைகள் இல்லாமல், தீவிர வலதுசாரி பொறிகள் இல்லாமல் இந்தத் தேர்தலில் அதிகபட்ச பலன்களைப் பெற உங்கள் கைகளை அல்ல, உங்கள் கால்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நாட்டிற்குச் சிறந்த அரசாங்கம் எது என்பதை உங்கள் இதயம் அறியும். அந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது உங்களுக்கு நல்லது.

பல நூறு ஆண்டுகளாக பிரித்தானியரின் காலணியாக இருந்த இலங்கைக்கு 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. இந்த வாக்கெடுப்பு 1931ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் திகதி முதல் ஜூன் 20ஆம் திகதி வரை 7 நாட்கள் இலங்கை கவுன்சில் அல்லது அப்போது இருந்த பாராளுமன்றக் கட்டமைப்பின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்டது.

தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே, ஆட்சியாளர்கள் அலுவலகங்களில் இருந்து பானை, சட்டி துணியுடன்,  வெளியே வந்து, அடுத்த நிமிடத்தில் புதியவர்கள் வந்து பழைய இருக்கைகளில் அமர்ந்து விடுகின்றனர். இந்த மக்கள் அனைவரும் தங்கள் நாற்காலியில் உட்கார்ந்து, இனி ஒருபோதும் வெளியே செல்லக்கூடாது என்ற முடிவு அவர்களின் ஆழ் மனதில் மறைந்துள்ளது. ஆனால் அப்படி வரும் பலர் ஐந்து வருடங்கள் கழித்து வீட்டிற்குச் செல்ல வேண்டியுள்ளது.

வரவிருக்கும் அரசாங்கத்தின் கீழ் பாதிக்கப்படும் குடிமக்கள் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு புதியதைத் தேர்வு செய்கிறார்கள். இந்தப் புதியது  பழையவற்றின் நீட்சியே. ஒருவேளை அவர்கள் கையில் இருக்கும் ஆயுதங்கள் மாறலாம். ஆயுதம் மாறினாலும் அதை ஏந்தியவனின் மனம் மாறவில்லை. அவர் இந்த நாட்டின் பழைய அரசியல் மாதிரியின் பிரதிநிதி. அவர் ஆட்சியில் நீடிக்க விரும்புகிறார். அவர் தனது குழந்தைகள், உறவினர்கள் மற்றும் செல்லப்பிராணிகளை ஆட்சிக்குக் கொண்டு வரவிரும்புகிறார். அப்போதும் இது நடந்தது. இன்றும் அது நடக்கிறது. அது நாளையும் நடக்கும். (14.11.2024)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X