2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி 5 க்குள் நிறைவு

S.Renuka   / 2025 மார்ச் 31 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஏப்ரல் 5 ஆம் திகதிக்குள் நிறைவுக்கு கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக அரசாங்க  அச்சக அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

 தபால் வாக்களிப்புக்காக மொத்தம் 700,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு வருகின்றன.

இந்த வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் 7ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அனைத்து மாவட்ட செயலகங்களிலும் விநியோக செயல்முறை நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22, 23, 24, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்.

அனைத்து உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளையும் அச்சிடும் பணி ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் முடிவடையும் என்றும் அரசாங்க அச்சக அதிகாரி உறுதியளித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான இந்த உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளின் விநியோகம் ஏப்ரல் 16 ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் திகதி வரை  இடம்பெறும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X