Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 10 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட 8 பிரதிவாதிகளை எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (10) நோட்டீஸ் பிறப்பித்தது.
கண்டியில் 2021ஆம் ஆண்டு டிசெம்பர் 1 ஆம் திகதி நடந்த சமையல் எரிவாயு வெடிப்பில் உயிரிழந்த 51 வயது பெண்ணின் கணவர் மற்றும் 4 பிள்ளைகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமையவே மேற்குறிப்பிட்ட நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.யு.பி.கரலியத்தே மற்றும் எம்.டி.எம்.லாஃபர் அடங்கிய இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் எடுத்துக்கொள்ளபட்ட போதே பிரதிவாதிகள் அனைவருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு அமர்வு உத்தரவிட்டது.
மனுதாரர்கள் தமது மனுவில், லிட்ரோ கேஸ் கம்பனி லங்கா லிமிடெட், அதன் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியும் தலைவருமான அனில் கொஸ்வத்த, அதன் தலைவர் தெஷார ஜயசிங்க, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் எஸ்.டி.எம்.எஸ்.திஸாநாயக்க மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம், செப்டெம்பர் மாதம் லிட்ரோ நிறுவனத்தின் மூலம் விநியோகிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அந்நிறுவனத்தின் வர்த்தக முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டரை தாங்கள் வாங்கியதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தனது மனைவியான பிரியங்கனி அசோகா சோமவீர, 2021ஆம் ஆண்டு டிசெம்பர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் பாடசாலை செல்லும் தனது பிள்ளைகளுக்கு உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்பின் பின்னர் உயிரிழந்ததாக தபுதாரர் குறிப்பிட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago