2025 ஜனவரி 06, திங்கட்கிழமை

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்து - ஒருவர் படுகாயம்

Freelancer   / 2025 ஜனவரி 04 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் பகுதியில் இன்று காலை 
மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியும், ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், லொறி சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனவும், எனவே சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்து அந்த பகுதியில் இருந்த கேரேஜில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X