2025 மார்ச் 21, வெள்ளிக்கிழமை

லண்டனுக்கான விமானங்கள் இரத்து

Freelancer   / 2025 மார்ச் 21 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதால் இன்று புறப்படவிருந்த UL 503 மற்றும் 504 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது

ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டதையடுத்து விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த விமானங்களில் பயணிக்கத் திட்டமிட்டிருந்த பயணிகள் மேலதிக தகவல்களுக்காக பயணச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட மையங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X