Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 09, வியாழக்கிழமை
Simrith / 2025 ஜனவரி 08 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுகொலை செய்யப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பம், அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர், லசந்த மரணித்து 16 வருடங்களுக்குள் நான்கு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எவருக்கும் அரசியல் உள்நோக்கம் இல்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் லசந்த விக்ரமதுங்கவின் மரணம் மட்டுமல்லாது மேலும் பல முக்கிய வழக்குகளையும் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது.
"ஆரம்பத்தில், இது புலிகளால் செய்யப்பட்டது என்ற பெரிய ஊகத்துடன் இந்த வழக்கு TID இன் கீழ் இருந்தது. எவ்வாறாயினும், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றுமாறு எமது சட்டத்தரணி கோரினார். பின்னர் அது ஷானி அபேசேகர ஒரு பகுதியாக இருந்த சமயத்தில் சிஐடிக்கு மாற்றப்பட்டது.
"சிஐடி நடத்திய விசாரணையில், கொலையில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் அறியும் அளவிற்கு கூட, மரணம் தொடர்பான பல முக்கிய உண்மைகள் வெளிவந்தன," என்று அவர் கூறினார்.
இந்த அரசாங்கத்தின் கீழ், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குத் திரும்பியுள்ள நிலையில், புதிய விசாரணைகள் தேவையில்லை எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதே எஞ்சியுள்ளதாகவும் லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய சகாக்கள் இந்த அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மறைந்த இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 16வது நினைவு தினம் இன்று (ஜனவரி 08) அனுஸ்டிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago