2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ரூ.30 கோடி மதிப்புள்ள கொக்கெய்ன் சிக்கியது

Editorial   / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி கபில 

இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ்  கென்யா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதரும் நுழைவாயிலில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை (24) இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று விமான நிலைய சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது. 

கென்யா நாட்டைச் சேர்ந்த 26 வயதான இவர், மோட்டார் வாகனங்களை விற்பனைச் செய்யும் வர்த்தகராவார். 

இந்தோனேசியா அடிஸ்அபாபாவில் இருந்து கட்டார் தோஹாருக்குச் சென்று, அங்கிருந்து கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான கிவ்.ஆர்654 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

அவரினால் கொண்டுவரப்பட்ட பயணப்பையில் 'குக்கீஸ்' பிஸ்கட் அடங்கிய மூன்று டின்கள் இருந்துள்ளன. அதில் 4 கிலோகிராம் நிறையைக் கொண்ட கொக்கெய்ன் போதைப்பொருள் குளிசைகள்  180யை மறைத்துவைத்து வந்துள்ளார். 

எவ்விதமான விபரங்களையும் தெரிவிக்காது கிரின் செனல் ஊடாக விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு முயன்றபோதே, சுங்க அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தில் கண்காணிப்பதற்காக, சுங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருக்கொடவும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தார். 

கைது செய்யப்பட்ட கென்ய பிரஜை, இலங்கைக்கு முதன்முறையாக வருகைதந்துள்ளார். இவர் தொடர்பில்   போதைப்பொருள் சுங்க கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு சர்வதேச புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன. 

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய் போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என விமான நிலைய சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .