Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹஸ்பர் ஏ.எச்)
ருஸ்தி மேல் பாய்ந்த பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பியுள்ளார்..
கிண்ணியாவில் திங்கட்கிழமை (31) அன்று இடம்பெற்ற பலஸ்தீன் ஆதரவு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ருஸ்தியின் கைதுக்குப் பின்னால் பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவே நினைக்கிறேன்.ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டமை, கவிதை எழுதிய முஸ்லிம் இளைஞனை கோட்டாபய அரசாங்கத்தால் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டமையே நினைவு வருகின்றது.
தற்போது இந்த கைதுக்கு பொலிஸாரால் சொல்லப்பட்ட காரணத்தைப் பார்க்கும்போது அவர்கள் ருஸ்தியை குற்றவாளியாக்குவதற்கான காரணத்தை தற்போது தேடுவதாகவே உணர்கிறேன்.
பொலிஸாரின் கூற்றுப்படி அவர் அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்டிருப்பின் ஸ்டிக்கர் ஒட்டும்வரை அவர் ஓர் அடிப்படைவாதி என பொலிஸாருக்குத் தெரியாது. இலங்கையில் ருஸ்தி மட்டும்தானா அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு சமூகத்திலும் தாம் சார்ந்த சமூகத்தின் அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்ட பலர் உள்ளனர்.அவ்வாறு எனில் அவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியுமா?.அடிப்படைவாத கருத்துக்களை வெளிப்படையாகக் கூறும் பிக்குகளின் மீது இந்த சட்டம் பாயுமா? என்றும் கேள்வி எழுப்பினார்்
இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஓய்வு பெறுவதற்காக, இஸ்ரேலிய கொத்தனியாக இலங்கை மாறிவருவதை நாம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உள்ளோம். அவர்களின் வணக்கஸ்தலங்கள் நிறுவப்படுவதையும் அவர்களின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளையும் கூறியுள்ளோம். அதற்கான நடவடிக்கை ஒன்றையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.அது ஏன் என்பது இந்த கைது மூலமாகத் தெளிவாகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியதுக்கே பயங்கரவாத சட்டம் எனில், இஸ்ரேலின் பாதுகாவலனாகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம், இன மத பேதமற்ற அரசு என்ற கோஷங்களுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தற்போது அதே பயங்கரவாத சட்டத்தையே ராஜபக்ஷக்களை விட மோசமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்த இரட்டை வேடத்துக்கு விரைவில் மக்கள் பதில் வழங்குவார்கள். ருஸ்தியின் விடுதலைக்காக நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago