Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை
Simrith / 2025 ஜனவரி 09 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலில் தத்தளிக்கும் ரோஹிங்கியா மக்களை மீட்டு பாதுகாப்பாக கரையேற்ற இலங்கை அதிகாரிகளும் மக்களும் மேற்கொண்ட உயிர்காக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டிய UNHCR அல்லது UN அகதிகள் முகாமையகம், அம்மக்களுக்கு தொடர்ந்து அரவணைப்பையும் அடைக்கலத்தையும் வழங்குமாறு இலங்கை அதிகாரிகளைக் கோரியுள்ளது.
"இந்த புதிய வருகையாளர்களுக்கு தொடர்ந்து இரக்கம் மற்றும் விருந்தோம்பலை வழங்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அவர்களில் பலர் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதுடன், அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட வாரக்கணக்கில் கடல் பயணத்திற்கு ஏற்புடையதற்ற படகுகளில், பாதுகாப்பைத் தேடிப் பயணம் செய்கிறார்கள்," என்று UNHCR ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இவ்வாறானவர்களை பாதுகாப்பாக கரை சேர்ப்பதையும் அவர்கள் உயிர்காக்கும் உதவியைப் பெறுவதையும் உறுதி செய்வதே UNHCR இன் முன்னுரிமை என்று அவர் மேலும் கூறினார்.
அவர்கள் அவசர உதவியைப் பெறக்கூடிய தற்காலிக தங்குமிடங்களை அரசாங்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர் என்று பேச்சாளர் தெரிவித்தார்.
UNHCR ஆனது இவ்வாறான அகதிகள் பாதுகாப்பு மற்றும் உதவிக்காக அரசாங்கம், UN மற்றும் NGO பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago