2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்யாவுடன் இணைய இலங்கை பேச்சு

Freelancer   / 2022 செப்டெம்பர் 17 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய கட்டண முறையான எம்ஐஆர் உடன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அதிகாரிகள், மொஸ்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன ஸ்புட்னிக் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளினதும் மத்திய வங்கிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், மத்திய வங்கியின் அனுமதியை பெற்ற பின்னர் அதை அறிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விசா மற்றும் மாஸ்டர்காட் செயல்பாடுகள், மார்ச் 6ஆம் திகதியன்று ரஷ்யாவில் நிறுத்தப்பட்ட நிலையில், ரஷ்ய சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தரும் போது, எம்ஐஆர் அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என அதிகாரிகள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் மொஸ்கோவுக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .