2024 நவம்பர் 18, திங்கட்கிழமை

ரவியின் நியமனத்துக்கு ரணில் எதிர்ப்பு

J.A. George   / 2024 நவம்பர் 18 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் கட்சிகளின் எந்த ஒப்புதலும் இல்லாமல் தன்னிச்சையான முறையில் இந்த நியமனம் இட்பெற்றுள்ளதாக  புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணிக்கு சொந்தமான இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பில் அந்த முன்னணியின் அனைத்து கட்சிகளும் நாளை (19) காலை கொழும்பில் கூடி முடிவெடுக்கவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்பதுடன், கூட்டுத் தீர்மானமின்றி செயற்படும் திறன் அவருக்கு இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். 

புதிய ஜனநாயக முன்னணியின் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்தித்து இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பில் உத்தியோகபூர்வ தீர்மானம் எடுக்கவுள்ள நிலையில், இவ்வாறான தன்னிச்சையான செயற்பாட்டை அங்கீகரிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X