2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

ரயில் கட்டணங்கள் 58%ஆல் அதிகரிக்கும்

Freelancer   / 2022 மார்ச் 29 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இன்று (29) தெரிவித்தார்.

முதல் 10 கிலோமீற்றருக்கு, கிலோமீற்றருக்கு 1 ரூபாய் 30 சதமாக இருந்த மூன்றாம் வகுப்பு ரயில் டிக்கெட்டின் விலை 2 ரூபாயாக அதிகரிக்கப்படும்  எனவும் அதற்கமைய 10 கிலோமீற்றருக்கான டிக்கெட்டின் விலை 20 ரூபாயாக உயரும் என்றும் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக நான்கு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X