2025 மார்ச் 12, புதன்கிழமை

ரோயல் பார்க் கொலை சம்பவம் - மைத்திரிக்கு நோட்டீஸ்

J.A. George   / 2025 மார்ச் 11 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜெயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவருக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ​​அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்றுவரை அந்தத் தொகையை செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.

அதன்படி, மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்காக தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான காரணத்தை முன்வைக்குமாறு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .