2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

ரணில் வீடு எரிப்பு: பிரதி அமைச்சருக்கு தொடர்பில்லை

S.Renuka   / 2025 மார்ச் 30 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடையவராக கருதப்படும் வழக்கில், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை இளைஞர் விவகார அமைச்சகம் மறுத்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு  ஜூலை 9ஆம் திகதி அன்று நடந்த சம்பவம் தொடர்பாக குணசேகர சந்தேக நபராக அடையாளம் காணப்படவில்லை என்றும், பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும் துணை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.

"வழக்கை கையாண்ட கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தைத் தொடர்பு கொண்டபோது, அத்தகைய பிடியாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

தீயை அணைக்கும் போது தீயணைப்புப் படையினர் தடுத்தனர் என்ற கூற்று முற்றிலும் தவறானது" என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X