2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

யுவதியை நிர்வாணமாக வீடியோ எடுத்த விரிவுரையாளர்

Janu   / 2024 ஜூலை 17 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் ஆங்கில வகுப்பு நடத்தும் வீடொன்றில், யுவதி ருவர் குளித்துக்கொண்டிருக்கும் போது அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (16) அன்று முறைப்பாடு கிடைத்துள்ளது .

வவுனியா திருவனாவ் குளம் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் தங்கி இருந்த விடுதி ஒன்றில் குறித்த விரிவுரையாளர் ஆங்கில வகுப்பு ஒன்றை நடத்தி வந்துள் நிலையில் செவ்வாய்க்கிழமை (16) அன்று வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ​​அரச ஊழியரான பாதிக்கப்பட்ட யுவதி குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்,

அப்போது விரிவுரையாளர் வகுப்பை நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு சென்று குளியலறையின் ஜன்னல் வழியாக யுவதி குளிப்பதைன் கையடக்கத் தொலைபேசியூடாக வீடியோ எடுத்துள்ளார்.

குளித்துக்கொண்டிருந்த யுவதி , குளியலறையின் ஜன்னலிலிருந்து கையடக்கத் தொலைபேசி ஒன்று தெரிவதை கண்டு பயந்து அலறி அடித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார் .

பின்னர் ஆங்கில விரிவுரையாளர் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் , இதுகுறித்து, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ​​விரிவுரையாளர் குளியலறை அருகே நின்று வீடியோ பதிவு செய்வதை அதில் காணொளியாக பதிவாகியுள்ளது .

மேலும் இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து குறித்த யுவதிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .