2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

யுவதி விவகாரம்: ஹட்டன், நோர்வூட்டை சேர்ந்தவர்கள் சிக்கினர்

Editorial   / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த அங்காடியில் கடமையாற்றும் ஏழுபேர்  சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் செப்டம்பர் 18 ஆம் திகதி  இடம்பெற்றுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதும் பொரளையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தமது ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த பல்பொருள் அங்காடி நிர்வாகம் இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், ஹட்டன், நோர்வூட் மற்றும் தெஹியத்தகண்டியைச் சேர்ந்தவர்கள் என்றும், தாக்குதலுக்கு உள்ளான பெண், பொரளையைச் சேர்ந்தவர் என்பதுடன், ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், பொரளை மட்டுமன்றி கொள்ளுப்பிட்டிய, வெலிக்கட உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள அங்காடிகளில் களவெடுத்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .