Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Simrith / 2024 பெப்ரவரி 18 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
'யுக்திய' விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளது.
விசாரணைக்காக வாகனங்களை மேலும் தடுத்து வைக்க பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது, மேற்படி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் முறையான உத்தரவுகள் பெறப்படவில்லை என பாதுகாப்பு சபை குற்றம் சாட்டியது.
இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பொலிஸாரால் 'யுக்திய' விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் மலலகே சுதத் கித்சிறி என்றழைக்கப்படும் “வெலிவிட்ட சுத்தா”வின் சகோதரிக்கு சொந்தமான பல வாகனங்களை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது .
குறித்த பெண்ணிடம் இருந்து ஐந்து சொகுசு பஸ்கள், சொகுசு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
5 hours ago