Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 03 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்.
மற்றைய யுவதி யாழ்ப்பாணம் வெல்வெட்டித்துறையைச் சேர்ந்த 26 வயதுடையவர்.
விமானப் போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த கட்டார் ஏர்வேஸ் அதிகாரிகள் இருவரையும் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விசாரணையில், இந்த இத்தாலி விசாக்கள் பொய்யான தகவல்களைக் கொண்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அதனையடுத்தே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
21 minute ago
32 minute ago