2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

யானைக்கு வாழைப்பழம் கொடுத்த பெண் பலி

Editorial   / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 02:13 - 0     - 154

 சுமனசிறி குணதிலக்க

கோனகனார பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தல கதிர்காமம் வீதியில்   கதிர்காமம் நோக்கி பயணித்த லொறி யானையால் கவிழ்ந்ததில், அந்த லொறிக்குள் அகப்பட்ட  பெண் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக கோனகனார பொலிஸார் தெரிவித்தனர்.

முதுகண்டிய மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான கே.ஜி.கெரசுதி (66) என்ற பெண்ணே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் , கிராமத்தைச் சேர்ந்த குழுவினருடன் லொறியில் கதிர்காம யாத்திரைக்குச் கடந்த (12) சென்று கொண்டிருந்த போது வீதியை மறித்து கொண்டு காட்டு யானைக்கு நின்று கொண்டுள்ளது. .

வாழைப்பழம் சீப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, காட்டு யானை, லொறியில் இன்னும் உணவுகளை தேடியது. உணவுகள் கிடைக்காமையால், தனது தும்பிக்கையால் லொறியை புரட்டியது.

இதன்போது முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த  பெண் உடல் நசுங்கி பலத்த காயங்களுடன் புத்தள பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது. 

புரட்டப்பட்டிருந்த லொறி, மீட்கப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட்ட படமே இதுவாகும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X