2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

“யாழ். விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மாற்றுவோம்”

S.Renuka   / 2025 மார்ச் 31 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - சர்வதேச விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என  சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.  

யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (30)  அன்று விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று விமான நிலையத்தின் விஸ்தரிப்புகள் தொடர்பிலும், அதன் சேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கட்வாறு குறிப்பிட்டார். 

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

இது சர்வதேச விமான நிலையம். இங்கு குறைந்தளவான விமான சேவைகள் இடம்பெறுவதனால், குறைந்தளவான பயணிகளே வருகை தருகின்றனர். 

பயணிகள் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

விமான நிலையத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மிக விரைவில் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வோம். 

விமான ஓடுபாதைகளை விஸ்தரிக்க வேண்டிய தேவை உள்ளது.

அதேபோல, நிரந்தர கட்டடங்களையும் அமைக்க வேண்டும். இதனை ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

ஆறு மாதங்களுக்குள் இந்த விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு நிச்சயம் மாற்றியமைக்கப்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X