2024 டிசெம்பர் 18, புதன்கிழமை

யாழ். மாவட்டத்தில் 99 பேருக்கு எலிக்காய்ச்சல்

Freelancer   / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த நோய் காரணமாக 7 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .