2025 ஜனவரி 12, ஞாயிற்றுக்கிழமை

யாழ். இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

Freelancer   / 2025 ஜனவரி 11 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி விசாவைப் பயன்படுத்தி ஜேர்மனிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், இன்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் - இளவாலைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். அவர் புது டெல்லிக்குச் சென்று பின்னர் ஜேர்மனிக்கு மற்றொரு விமானத்தில் செல்ல முயன்றுள்ளார்.

தொழில்நுட்ப சோதனைகளின் போது, அவர் வழங்கிய ஜேர்மன் விசா போலியானது என்பது தெரியவந்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X