2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

“மோடி பிரதமரானால் மொட்டை அடிப்பேன்”

Editorial   / 2024 ஜூன் 03 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறு என நிருபணம் ஆகும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்’’ என ஆம் ஆத்மி கட்சியின் புது டெல்லி வேட்பாளர் சோம்நாத் பாரதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் தவறு என நிருபணமாகும். 4-ம் திகதி வாக்குகள் எண்ணப்பட்ட பின்பு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும். மோடி 3-வது முறையாக பிரதமராகமாட்டார். அப்படி அவர் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்.

டெல்லியில் 7 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும். மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அதிகளவில் வாக்களித்துள்ளனர். மோடி மீதான அச்சம் காரணமாக, கருத்து கணிப்பு முடிவில் தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் 4 ஆம் திகதி வரை உண்மையான முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .