2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மொட்டை தோற்கடித்த மொட்டு

Freelancer   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) தலைவர் முன்வைத்த பட்ஜெட் யோசனையை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இணைந்து தோற்கடித்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) தலைவரினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஏழு உறுப்பினர் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 19 பேர் இணைந்து, ஒன்பது மேலதிக வாக்குகளால் தோற்கடித்துள்ளனர்.

இலங்கையில், இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களில் எல்பிட்டிய பிரதேச சபை மட்டுமே தற்போது செயற்பாட்டில் உள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டம், பிரதேச சபையின் தலைவர் கருணாசேன பொன்னம்பெருமவின் (ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன) தலைமையில், செவ்வாய்க்கிழமை (05) முற்பகல் 10 மணிக்கு, பிரதேச சபையின் மண்டபத்தில் ஆரம்பமானது.

சமய வணக்கம் மற்றும் உயிரிழந்த படையினரை நினைவுகூர்ந்ததன் பின்னர், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட யோசனைகள், சபை தலைவரினால் முன்​வைக்கப்பட்டது. அதன் பின்னர் வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .