2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மேலதிக பொலிஸார் குவிப்பு

Freelancer   / 2022 மே 28 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேலதிகமாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படுகின்ற மோதல் நிலைமையை தவிர்ப்பதற்காக இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அனுராதபுரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வீட்டின் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

அவரது வீட்டை தாக்குவதால் எரிபொருள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக செயற்பாடாகும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X