Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 நவம்பர் 08 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், நளினி ஆகியோரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (07) நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம். கே. சிவாஜிலிங்கம் இத்தாவில் பகுதியில் உள்ள முருகனின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இதன்போது முருகனின் மனைவி நளினியும் உடன் இருந்துள்ளார். தமிழ்நாட்டின் வேலூர் சிறையில் இருந்த காலத்தில் பழ நெடுமாறனுடன் சென்று தான் சிறையில் வைத்து இவர்களை சந்தித்திருந்த நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட போது மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தில் தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டிருந்தது என்றும் தற்போது விடுதலையின் பின்னர் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
முருகன், நளினி தம்பதியர் லண்டனில் உள்ள தங்களது மகளிடம் செல்வதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்களின் மகள் மீண்டும் விண்ணப்பித்துள்ளதாகவும் அதன் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்ததாக எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago