2025 பெப்ரவரி 06, வியாழக்கிழமை

முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு பிணை

Freelancer   / 2025 ஜனவரி 24 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுலோச்சன கமகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 90 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட காணி தொடர்பான நட்டஈட்டை விரைவாக முடிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது.AN

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X