2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

முன்னாள் பிரதி சபாநாயகர் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய எல்ல வீதியின் 01 பதவிக்கு அருகிலுள்ள முன்னாள் பிரதி சபாநாயகர் ஜே.எம்.ஆனந்த குமாரசிறியின் வீடு, சனிக்கிழமை  (14) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போர துப்பாக்கிகள் 12, இரண்டு துப்பாக்கிகள், 12 ஆம் இலக்க  குண்டுகள் 22, கைக்குண்டுகள் இரண்டு,    வெடிகுண்டுகள் இரண்டு, மின்சாரம் இல்லாமல் இயக்கும் ஒன்பது டெட்டனேட்டர்கள், உடல் கவசங்கள்  இரண்டு மற்றும் ஒரு ஸ்பிரிங் கத்தி ஆகியனவை கைப்பற்றப்பட்டன.

குறித்த வீட்டைப் பராமரித்து வந்த புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடிமருந்து துப்பாக்கிகள் சட்டப்பூர்வ உரிமத்துடன் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் உரிமங்கள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவற்றில்   தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. ஏனைய பொருட்களை  ஆனந்த குமாரசிறி  சட்டபூர்வமாக பெற்றுக்கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பொலிஸாரிடம்  ஒப்படைத்துள்ள விசேட அதிரடிப்படையினர், கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக  வெல்லவாய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .