2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

முதலாவது முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் காலமானார்

Editorial   / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வானொலியில்  செய்தி வாசித்த முதல்  முஸ்லிம்  பெண் செய்தி வாசிப்பாளரும்  தொலைக் காட்சியில்  செய்திவாசித்த முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளரும் என்ற பெருமை பெற்ற ஆயிஷா ஜுனைதீன் காலமானார். இறக்கும்போது அவருக்கு 74 வயது.

 முஸ்லிம்  சேவை முதல் பணிப்பாளர் வி ஏ .கபூரின்    சிபார்சில்  முதன் முதலாக "பிஞ்சு மனம்" சிறுவர் நிகழ்ச்சி நடத்தும்  வாய்ப்பு   பெற்று, சிலாபம் மாதம்பை பழைய நகரிலிருந்து வானொலிக்குள்  பிரவேசித்து, முஸ்லிம் சேவையின்  முதல் பெண்  தயாரிப்பாளரானார்.தொடர்ந்து  பகுதி நேர அறிவிப்பாளரானார். இலங்கை வானொலியில்  செய்தி வாசித்த முதல்  முஸ்லிம்  பெண் செய்தி வாசிப்பாளரும் இவரே.

  ரூபவாஹினி  தொலைக்காட்சி  ஆரம்பமான  காலத்திலேயே, தொலைக் காட்சியில்  செய்திவாசித்த முதல் முஸ்லிம் பெண் அறிவிப்பாளர் என்றபெருமையும் இவருக்குண்டு

  ரூபவாஹினியில்  ஒளிபரப்பான பல  பிரபல நாடங்களுக்கு  இவர் எழுதிய தமிழ் மொழியிலான  மொழிபெயர்ப்பே  காட்சி படுத்தப்படும்.தமிழ் மொழியோடு, ஆங்கிலம், சிங்கள  மொழிகளிலும்  பாண்டித்தியம்  பெற்றவர். ஜனாஸா  அஸர் தொழுகையின் பின்னர் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X