2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

முட்டைகளை வீசுவதற்கு தலா ரூ.5,000

Editorial   / 2022 ஜனவரி 31 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசுவதற்கு, நபரொருவருக்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், இருவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவ்விருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்கண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவர், தங்களுக்கு 5,000 ரூபாய் வழங்கியதாகவும். அதன்பின்னர் அவ்விடத்துக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அவ்விருவரும் நிட்டம்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அநுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டையை வீசுவதற்கு, கம்பஹா பிரதேசத்திலுள்ள பிரபல அமைச்சரும் மற்றும் பிரபல்யமான வர்த்தகரும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிந்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .