2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

’மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை’

Freelancer   / 2024 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனிமொழி எம்.பி. நேற்று தமிழக மீனவர்கள் பிரச்சினையை இந்திய மக்களவையில் எழுப்பியுள்ளார்.

அதில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி உரையாற்றுகையில்,

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றியது மட்டும் இல்லை. இந்த ஆண்டு மட்டுமே 27 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. சுமார் 177 இந்தியப் படகுகள் இப்போது இலங்கை அரசிடம் கைவசம் இருக்கின்றன.  

அந்தப் படகுகள் இந்திய மீனவர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, படகுகள் விடுவிக்கப்படவில்லை. தூத்துக்குடி தருவைகுளத்தில் இரண்டு படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர், 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த அரசு இது குறித்து கவனத்தை எழுப்பிய பிறகும் இது நடந்திருக்கிறது. எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .