Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 31, திங்கட்கிழமை
Freelancer / 2025 மார்ச் 28 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1974 ஆம் மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளால் இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை மரபுரீதியாக தொடர்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய பாராளுமன்றில் நேற்று கேள்வி நேரத்தின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் நிலை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இதன்போதே இவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீன்பிடி தொடர்பாக இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளன .ஒன்று 1996 ஆம் ஆண்டின் மீன்வள மற்றும் நீரியல் வளச் சட்டம். மற்றையது 1979 ஆம் ஆண்டின் வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் மீன்வள ஒழுங்குமுறை சட்டம். இந்த இரண்டு சட்டங்களும் 2018 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டன. இதனால் மிகவும் கடுமையான தண்டனைகள், பாரிய அபராதங்கள் மற்றும் விளக்கமறியல் என்பன வழங்கப்படுகின்றன.
தண்டனை அனுபவிக்கும் பலர் படகு உரிமையாளர்கள், ஓட்டுநர்களாக இருப்பதுடன் மீண்டும் மீண்டும் அவர்கள் கைதாகி குற்றவாளிகளாக காணப்படுவதால், தீர்வு முயற்சிகள் சிக்கலாகின்றன.இலங்கையில் இந்திய மீனவர்களை தடுத்து வைப்பது தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கான மூல காரணம் 1974 ஆம் ஆண்டு சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையப்பட்டபோது ஆரம்பமாகியது.
அதைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டில் இலங்கை மீன்பிடி அதிகார வரம்பை வரையறுத்ததன் மூலம் இப்பிரச்சினை நீண்டுள்ளது.அதேநேரம் தற்போது, இலங்கையில் மொத்தம் 97 பேர் விளக்கமறியலில் உள்ளனர்.அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருவதுடன், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர் என்றார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
47 minute ago
51 minute ago