Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 ஜூன் 30 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டில் முதன்முறையாக மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்பு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள விவசாய துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
வெலிமட தரகல லசந்த ருவன் லங்காதிலக என்ற கண்டுபிடிப்பாளரே இவ்வாறு மிளகாயில் இருந்து ஐஸ்கிரீமை தயாரித்துள்ளார்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோருக்கு மிளகாய் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது.
இந்த மிளகாய் ஐஸ்கிரீம் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருளாக சந்தைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் இனிப்பு மற்றும் காரமான மிளகாயை ஒன்றாக இணைத்து புதிய சுவையை அனுபவிக்க முடியும் எனவும் லங்காதிலக தெரிவித்தார்.
ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பீடத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த சில்லி ஐஸ்கிரீம் செய்முறை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த செய்முறை வெற்றியடைவதால், இந்த தயாரிப்பு சந்தைக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விதைகளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் காய்ந்த மிளகாயின் பட்டையைப் பயன்படுத்தி இந்த உப தயாரிப்பு தயாரிக்கப்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக இரண்டு வகையான பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த மிளகாய்கள் ஐஸ்கிரீம் சந்தைக்கு வெளியிடப்படும் என்றும் ருவன் லங்காதிலக்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .