Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 26 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள் கையிருப்பு நேற்று (25) முதல் நாளை 27ஆம் திகதி வரை உள்ளமையால் மேற்குறிப்பிட்ட தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நேற்று (25) அறிவித்தது.
இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் நாளை 27 ஆம் திகதி பரிசீலிப்பதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தற்போதுள்ள எரிபொருட்களின் இருப்புக்கள் தொடர்பாகவும் அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதிகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு எரிபொருள் மற்றும் நாப்தா மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு இம்மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என ஆணைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், நிலக்கரி மற்றும் பிற எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் கலந்துரையாடினோம். எதிர்காலத்தில் இந்த அன்னியச் செலாவணி பிரச்சனையும் தீர்க்கப்படும் என நம்புகிறோம்.
இதேவேளை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார நெருக்கடிக்கு குறுகிய மற்றும் நடுத்தர கால தீர்வுகள் பலவற்றை பரிந்துரைத்துள்ளது.
மின்சார நுகர்வோரின் ஆதரவுடன் துரிதப்படுத்தப்பட்ட மின் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மின்சாரத்திற்கான தேவையை குறைப்பது குறுகிய கால திட்டங்களில் ஒன்றாகும்.
மேலும், மத்திய கால தீர்வாக அரசு மற்றும் தனியார் துறை மின் உற்பத்தியாளர்களை திறம்பட பயன்படுத்த ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் 3000 மெகாவோட்டுக்கும் அதிகமான மின் உற்பத்தித்திறன் கொண்ட ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துகின்றன,
மின் பற்றாக்குறை ஏற்பட்டால், அந்த ஜெனரேட்டர்களில் இருந்து திறன்வாய்ந்த மின் உற்பத்தியை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற ஜெனரேட்டர்களை தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் சூரிய மற்றும் காற்றாலை மின்சக்தி அமைப்புகளை விரைவில் நிறுவுமாறு பரிந்துரைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago