2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மாளிகாகந்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Editorial   / 2023 ஜூலை 31 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க உள்ளிட்டோருக்கு வீதிகள் மற்றும் நடைபாதைகளை மறித்து பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், கொழும்பு 10, டெக்னிக்கல் சந்தியில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரையிலான பகுதிக்குள்   ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை செய்து நீதிமன்றம் திங்கட்கிழமை (31) உத்தரவு பிறப்பித்துள்ளது.   

வசந்த சமரசிங்க உள்ளிட்ட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் மருதானை பொலிஸார் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்ட மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .