2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மாணவர்களிடம் சில்மிஷம் ; இளைஞன் கைது

Janu   / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் 4ஆம் தரத்தில் கல்விக்கற்கும் மாணவன் மற்றும்  மூன்று மாணவிகளுக்கு  தனது கைத்தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து குறித்த மாணவர்களின் உடல்களை தொட்டு பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில் கடமைபுரியும் கல்விசாரா ஊழியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேக நபரான இளைஞனின் நடத்தை பற்றி  குறித்த நான்கு  மாணவர்களும்  பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் பாடசாலையின் அதிபர் வென்னப்புவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனையடுத்து பொலிஸாரால் குறித்த நால்வரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதுடன் சந்தேக நபரான இளைஞனை கைது செய்து அவரின் அலைபேசியும் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸாரால்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .