Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் வகுப்புக்கு செல்வதற்காக, ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய இனந்தெரியாத நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை, அபகரித்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் மீரிகமவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.
மீரிகம பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் வந்த இந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அதன்போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவ்விரு மாணவர்களுக்கும் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அலைபேசியை பார்த்துக்கொண்டு பயணித்தமையால், நடந்த சம்பவத்தை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனினும், முன்பாக பயணித்த இருவர் சத்தபோட்டதை அடுத்து திடீரென பார்த்தபோது, வில்வத்த ரயில் கடவை பக்கமாக ஒருவர் ஓடிகொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
அபகரிக்கப்பட்ட பை, அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
52 minute ago