2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

மாசடைந்த தேங்காய் எண்ணெய்யுடன் இருவர் கைது

S.Renuka   / 2025 மார்ச் 10 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, மாசடைந்த சுமார் 15,620 லீற்றர் தேங்காய் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற லொறியுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையின் அரலகங்வில முகாம் தெரிவித்துள்ளது.

விமானப்படையினரிடமிருந்து கிடைத்த புலனாய்வுத் தகவலை அடுத்து, அரலகங்வில பொலிஸ் சிறப்புப் படையின் பொறுப்பதிகாரி மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கொழும்பிலிருந்து பொலன்னறுவைக்கு கொண்டு செல்லப்பட்ட மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய்யை ஏற்றிச் சென்ற  லொறியை மின்னேரியா பகுதியில் சோதனை செய்தபோது, வைக்கோலால் செய்யப்பட்ட சாக்குகளால் மூடப்பட்டிருந்த 35 பீப்பாய்கள் மாசுபட்ட தேங்காய் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

லொறி, தேங்காய் எண்ணெய் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கழிவுகளிலிருந்து விலங்கு எண்ணெய்யை உற்பத்தி செய்யும் பொலன்னறுவை பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்குத் தேங்காய் எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர், பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, மேலும் 35 பீப்பாய்கள் மாசுபட்ட தேங்காய் எண்ணெய்யைக் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .