2025 பெப்ரவரி 02, ஞாயிற்றுக்கிழமை

மொஹமட் லஃபர் தாஹிர் பதில் நீதியரசராக நியமனம்

Simrith   / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேன்முறையீட்டு நீதிமன்றில் தற்போது கடமையாற்றும் மிக மூத்த நீதிபதியான மொஹமட் லஃபர் தாஹிர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, நீதியரசர் மொஹமட் லஃபர் தாஹிர் இன்று (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பந்துல கருணாரத்ன ஓய்வு பெறுவதற்கு முந்தைய விடுமுறையைப் பெற்றுக் கொண்டிருக்கும் பட்சத்தில் அதை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X